எம்.ஜி.ஆர் நூற்றாண்டு வளைவு திறக்கத் தடை - உயர் நீதிமன்றம் அதிரடி!

  Newstm Desk   | Last Modified : 19 Nov, 2018 03:48 pm
madras-hc-interim-banned-for-opening-mgr-arch

சென்னை மெரினாவில் அமைக்கப்பட்டு வரும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நினைவு வளைவை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

சென்னையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நினைவு வளைவு அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி, சென்னை காமராஜர் சாலையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்துக்கு எதிரே அமையவுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நினைவு வளைவுக்கு கடந்த செப்டம்பர் 23ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் ஆகியோர் இணைந்து அடிக்கல் நாட்டினர். 

அழகிய கலை இலக்கிய சிற்பங்களுடன் 66 அடி அகலமும், 55 அடி உயரத்திலும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வளைவு கட்டப்பட உள்ளது. சென்னை கடற்கரை சாலையில் அமைக்கப்படும் இரண்டாவது வளைவு இதுவாகும். முன்னதாக சட்டப்பேரவை வைர விழா வளைவு கடந்த 2013ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா வளைவு கட்டுமானப்பணிகள் நடைபெற்று வரும் சூழ்நிலையில், இதனை திறக்க தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

சுமார் 2.5 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் இந்த வளைவின் கட்டுமானப் பணி வேண்டுமானால் முடிவடையட்டும். ஆனால் வழக்கு முடியும் வரை வளைவை திறக்கக்கூடாது என நீதிபதிகள் சத்தியநாராயணன் சேஷாயி அமர்வு உத்தரவிட்டுள்ளது. மேலும், மக்களின் வரிப்பணத்தை ஏன் இவ்வாறு வீணடிக்கிறீர்கள்? என அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

பின்னர் வழக்கு ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close