இது என்ன சினிமாவா....என். ராம் எப்படி வாதாடலாம்? - நக்கீரன் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் கேள்வி !

  Padmapriya   | Last Modified : 21 Nov, 2018 05:12 pm
nakkheeran-editor-s-arrest-why-was-n-ram-allowed-to-make

நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் எழும்பூர் நீதிமன்றத்தில் பத்திரிகையாளர் 'இந்து' என்.ராம் பேச அனுமதிக்கப்பட்டது தொடர்பாக மாஜிஸ்திரேட் விளக்கம் தர சென்னை உயர் நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. 

சென்னை உயர்நீதிமன்றத்தில் நக்கீரன் கோபால் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், எழும்பூர் மாஜிஸ்திரேட் கோபிநாத் நீதிமன்றத்தில் என்.ராமை பேச வைத்தது சினிமாத்தனமாக இருந்ததாக கூறினர். 

மேலும் எந்த சட்டத்தின் அடிப்படையில் ராம் பேச அனுமதிக்கப்பட்டார் என்று மாஜிஸ்திரேட் விளக்கம் அளிக்க அவருக்கு நோட்டீசும் அனுப்பப்பட்டது. மேலும் நீதிமன்றங்களில் சட்டங்களுக்கு உட்பட்ட விசாரணை முறைகள் இருக்க வேண்டும் என்றும் தனிப்பட்ட நபர்களின் கருத்துகளுக்கு அங்கு இடம் இல்லை என்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தினர். 

கடந்த ஏப்ரல் மாத நக்கீரன் இதழில் நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக வெளியான கட்டுரையின் அடிப்படையில் நக்கீரன் கோபால் மீது ஆளுநர் அலுவலகம் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்பேரில் சென்னை விமானநிலையத்தில் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டார். அவர் மீது ஐபிசி 124-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையம் அழைத்து செல்லப்பட்டார்.

அதைத்தொடர்ந்து, நக்கீரன் கோபால் சென்னை எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அழைத்து செல்லப்பட்டு ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது, நக்கீரன் கோபாலை சந்திக்க வந்த இந்து என்.ராம், நீதிமன்றத்திற்குள் அனுதிக்கப்பட்டார். பின்னர் ஊடக பிரதிநிதி எனற அடிப்படையில் மாஜிஸ்திரேட் கேட்டுக் கொண்டதன் பேரில் நீதிமன்றத்தில் ஆஜராகி நக்கீரன் கோபாலுக்கு ஆதரவாக இந்து என்.ராம் கருத்து தெரிவித்தார். 

அப்போது, ஐபிசி பிரிவு 124 இந்த வழக்கில் செல்லுபடியாகாது என்று அவர் தெரிவித்தார். இதை ஏற்றால் தவறான முன்னுதாரனமாகிவிடும் என்றும் வேண்டுமென்றால் அவர் மீது அவதூறு வழக்கு போட்டிருக்கலாம் என்றார். இதைத்தொடர்ந்து நக்கீரன் கோபாலை சிறையில் அடைக்க வேண்டும் என்ற போலீஸ் தரப்பு வாதத்தை நிராகரித்த நீதிபதி கோபிநாத், 124வது பிரிவின் கீழ் நக்கீரன் கோபால் மீது வழக்கு பதிவு செய்தது செல்லாது என்றார். மேலும், நக்கீரன் கோபாலை விடுதலை செய்து நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close