சேவை வரி வழக்கில் வரும் 11ம் தேதி நடிகர் விஷால் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

  Newstm Desk   | Last Modified : 23 Nov, 2018 01:17 pm
actor-vishal-will-appear-the-court-on-the-11th-of-the-service-tax-case

சேவை வரி வழக்கில் வரும் 11ம் தேதி நடிகர் விஷால் நேரில் ஆஜாராக சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நடிகர் விஷால் ரூ.1 கோடி வரை சேவை வரி செலுத்தாத காரணத்தால், நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு சேவை வரித்துறையினர் கடந்த 2016-ம் ஆண்டு அவருக்கு சம்மன் அனுப்பினர். பல முறை (2016-ல் 2 முறையும், 2017-ல் 2 முறையும், 2018 -ல் 1 முறையும்) சம்மன் அனுப்பியும் அவர் நேரில் ஆஜராகததால் நடிகர் விஷால் மீது சேவை வரித்துறை சார்பில் சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு கடந்த அக்டோபர் மாதம் 17ம்  தேதியன்று விசாரணைக்கு வந்த போது நடிகர் விஷால் நேரில் ஆஜராகினார். அதனைத்தொடர்ந்து கடந்த 26ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகிய நடிகர் விஷால் தன் மீது தவறான குற்றசாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து வழக்கு விசாரணை இன்று ஒத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில், சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ஆனால், நடிகர் விஷால் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகவில்லை. இதனால், டிசம்பர் 11ம் தேதி நடிகர் விஷால் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி மலர்மதி உத்தரவிட்டுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close