சென்னை உயர்நீதிமன்றத்தின் விடுமுறை நாட்கள் அறிவிப்பு !

  Newstm Desk   | Last Modified : 08 Dec, 2018 07:23 pm
list-of-holidays-2019-high-court-of-madras

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வரும் 2019ஆம் ஆண்டிற்கான விடுமுறை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளைக்கு 2019ஆம் ஆண்டிற்கான விடுமுறைப் பட்டியலை சென்னை உயர் நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.  அதன் படி:

ஜனவரி 1ஆம் தேதி ஆங்கில வருடப் பிறப்பிற்கும், பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 15 முதல் 17 வரை பொங்கல் பண்டிகைக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும், கோடைகால விடுமுறையாக மே 1 முதல் ஜுன் 2 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல், அக்டோபர் 5ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை தசரா பண்டிகைக்கும், டிசம்பர் 25 முதல் 31ஆம் தேதி வரை கிறிஸ்துமஸை் பண்டிகைக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  குடியரசு தினம், தமிழ் வருடப் பிறப்பு, தீபாவளி, சுதந்திர தினம், மிலாடி நபி ஆகியவையும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இவை தவிர அரசு விடுறைகள், நீதிமன்ற விடுமுறைகள் பட்டியலும் சேர்த்து வெளியிடப்பட்டுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close