சென்னை உயர்நீதிமன்றத்தில் சேலம் ஆட்சியர் ரோஹணி ஆஜர்....!

  Newstm Desk   | Last Modified : 13 Dec, 2018 03:55 pm
salem-collector-rohini-ajar-at-the-chennai-high-court

அதிமுக கொடிக்கம்பத்தை  அகற்றக்கோரிய வழக்கில் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார். 

சேலம் பூலவாரி கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவர், தங்கள் கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பயணிகளுக்கு இடையூறாக அதிமுகவினர் அமைத்துள்ள கொடி கம்பத்தை அகற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் கொடி கம்பம் அமைக்க அனுமதியளிக்கப்பட்டது குறித்த உரிய ஆவணங்களுடன் சேலம் மாவட்ட ஆட்சியர், இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டது அதன்படி சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை  பொறியாளர் ஆகியோர் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகினார். 

வழக்கை விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்யும் படி உத்தரவிட்டதோடு, இந்த வழக்கை  ஜனவரி 22ம் தேதிக்கு ஒத்திவைத்தது. 

newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close