பேனர் விவகாரம்: அரசு அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்

  Newstm Desk   | Last Modified : 18 Dec, 2018 04:16 pm
banner-issue-high-court-condemns-government-officers

பேனர் விவகாரத்தில் காவல்துறை, மாநகராட்சி அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

விதிகளை மீறி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பேனர்கள் அகற்றம் தொடர்பாக சென்னை மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்தது. அதனை படித்து அதிருப்தி அடைந்த நீதிபதிகள் விதிமீறல் பேனர்கள் வைப்போர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், நடவடிக்கை எடுக்க முடியாவிட்டால் வேலையை ராஜினாமா செய்து விட்டு விருப்பப்படும் கட்சியில் இணைய வேண்டியது தானே எனவும் நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். மேலும் பேனர்கள் அகற்றாதது பற்றி 5 ஆண்டுகளாக அரசின் காரணங்களை கேட்டு சோர்வடைந்து விட்டதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். 

newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close