தமிழகத்தில் சாலையில் பேனர்கள் வைக்கத் தடை! - சென்னை உயர் நீதிமன்றம்

  Newstm Desk   | Last Modified : 19 Dec, 2018 12:51 pm
banners-ban-at-tn

தமிழகம் முழுவதும் சாலைகளை ஆக்கிரமித்து, வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்க தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 

சென்னையில் கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்காக பேனர்கள் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டுள்ளது என சமூக ஆர்வலர் ட்ராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில், பேனர்கள் வைத்தவர்கள் மற்றும் அதற்கு அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியிருந்தார். 

இந்த மனு இன்று நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில் நீதிபதிகள், தமிழக  மற்றும் அதிகாரிகளுக்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். 

பின்னர் நீதிபதிகள் பேசுகையில், "நீதிமன்ற உத்தரவுகளை அரசியல் கட்சிகளும், அதிகாரிகளும் மதிப்பதும் இல்லை. செயல்படுத்துவதும் இல்லை. இதுவரை விதிகளை மீறி பேனர்களை வைத்தவர்கள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? என காவல்துறை அதிகாரிகள் விளக்கமளிக்க வேண்டும்" என்று தெரிவித்தனர். 

மேலும், "சாலையில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், அரசியல் கட்சிகள், அமைப்புகள் என எவரும் பேனர் வைக்கக்கூடாது. ஜனவரி 4ம் தேதி அடுத்த விசாரணை நடைபெறும் வரை இந்த உத்தரவு தொடரும்.  பேனர்கள் தொடர்பான விதிமுறைகள் பின்பற்றப்படும் என தமிழக அரசு உறுதிமொழி அளிக்க வேண்டும்" என்று கூறினர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close