கஜா புயல் நிவாரண நிதி: மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

  Newstm Desk   | Last Modified : 19 Dec, 2018 04:49 pm
gaja-storm-relief-fund-madurai-high-court-order

கஜா புயல் பாதிப்பு தொடர்பான இறுதி அறிக்கை எப்போது தாக்கல் செய்யப்படும் என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் கஜா புயல் பாதிப்புகளை சரிசெய்ய அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும், இழப்பீடுகளை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பலர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். 

இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது.  அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மாநில பேரிடர் நிவாரண நிதியில் போதுமான நிதி இருந்தும் மத்திய அரசு நிதி வழங்கவில்லை என குற்றம் சாட்டினார். இதற்கு, மத்தியக் குழு அளிக்கும் இறுதி அறிக்கையின் அடிப்படையிலேயே தமிழகத்துக்கு நிதி வழங்க முடியும் எனவும், அது தொடர்பாகவே தமிழக அரசிடம் சில சந்தேகங்கள் கேட்டதாகவும் மத்திய அரசு சார்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதையடுத்து, இறுதி அறிக்கை எப்போது தாக்கல் செய்யப்படும் என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்கும்படி உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close