சர்கார் விவகாரம்: ஏ.ஆர்.முருகதாஸ் முன்ஜாமீன் - சென்னை உயர் நீதிமன்றம்

  Newstm Desk   | Last Modified : 20 Dec, 2018 01:31 pm
madras-hc-gives-anticipatory-bail-to-ar-murugadoss-in-sarkar-case

சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளுக்கு எதிராக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீதான வழக்கில், அவருக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சர்கார் படத்தில் அரசின் இலவசத் திட்டங்களை விமர்சித்து, அவற்றை தீயில் இட்டு கொளுத்துவது போன்ற காட்சிகள் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியது. போராட்டத்தின் இறுதியில் அந்த காட்சிகளை  நீக்க ஏ.ஆர்.முருகதாஸ் ஒப்புக்கொண்டார். ஆனால், இந்த விவகாரத்தில் மன்னிப்பு கோர முடியாது, இது தன் கருத்துச் சுதந்திரம் என்று ஏ.ஆர்.முருகதாஸ் கூறினார். மேலும், இனிவரும் படங்களில் இதுபோன்ற காட்சிகளை அமைக்கப்போவதில்லை என்ற உத்தரவாதமும் அளிக்க முடியாது என்றும் திட்டவட்டமாக கூறினார்.

இந்த வழக்கில் ஏ.ஆர்.முருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. 

அதே நேரத்தில் சமூக ஆர்வலர் தேவராஜன் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரின் பேரில் இயக்குநர் முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் முன்ஜாமீன் கோரி ஏ.ஆர்.முருகதாஸ் உயர் நீதிமன்றத்தில் மனு கொடுத்தார். 

இந்த மனுவில், அவரை டிசம்பர் 20ம் தேதி வரை கைது செய்யக்கூடாது என்று  நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்ட நிலையில், இன்று வழக்கில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையில் ஏ.ஆர்.முருகதாஸூக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close