தமிழகத்தில் ரேஷன் கடைகளில் சிசிடிவி கேமரா?

  Newstm Desk   | Last Modified : 20 Dec, 2018 04:08 pm
cctv-camera-at-ration-shops

ரேஷன் கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்துவது குறித்த பரிந்துரையை நுகர்பொருள் வாணிபக் கழகம், கூட்டுறவுத்துறைக்கு அனுப்ப வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் ரேஷன் கடையில் உள்ள பொருட்களை வெளியில் விற்றதால் ரேஷன் கடை ஊழியர் கீதா என்பவர் நீக்கப்பட்டார். இதனை எதிர்த்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள், ரேஷன் கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்துவது குறித்து நுகர்பொருள் வாணிபக்கழகம் பரிசீலிக்கலாம் என்று தெரிவித்தனர். சிசிடிவி கேமரா பொருத்துவது குறித்த பரிந்துரையை நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழக அரசின் கூட்டுறவுத்துறைக்கு அனுப்பி அனுமதி பெற வேண்டும். இதனை செயல்படுத்துவது தொடர்பாக ஜனவரி 10ம் தேதிக்குள் அரசுபதிலளிக்க வேண்டும் என்று கூறி வழக்கை நீதிபதிகள் அன்றைய தினத்திற்கு ஒத்தி வைத்தனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close