ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை: மதுரை உயர் நீதிமன்ற கிளை அதிரடி !

  Newstm Desk   | Last Modified : 22 Dec, 2018 08:06 am
do-not-open-sterlite-plant-untill-jan-21

வரும் ஜனவரி 21-ம் தேதி வரை ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அதிரடி தடை விதித்துள்ளது மதுரை உயர் நீதி மன்ற கிளை. 

நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தமிழக அரசின் இந்த அரசாணையை எதிர்த்து வேதாந்தா நிறுவனம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. 

இதனால் தீர்ப்பாயம் அமைத்த ஆய்வுக்குழு, நேரில் ஆய்வு செய்து, ஸ்டெர்லைட் ஆலையை  திறக்கலாம் என்று பரிந்துரை செய்ததன் காரணாமக ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டுமென தேசிய பசுமை தீர்ப்பாயம் டிச.15-ம் தேதி உத்தரவிட்டது. 

இதனால் சமூக ஆர்வலர்களும், ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுவினரும் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்நிலையில் ஸ்டெர்லைட் போராட்டக்குழுவை சேர்ந்த பேராசிரியர் பாத்திமா, ஐகோர்ட் மதுரை கிளையில், "ஸ்டெர்லைட் விவகாரத்தில்  அரசு எந்த முடிவில் இருக்கிறது என்பது தெரியவில்லை. இந்த வழக்கில் அப்பீல் செய்ய 90 நாள் அவகாசம் உள்ளது. எனவே, ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க கூடாது" என மனு தாக்கல் செய்தார். 

இந்த மனு மீதான விசாரணையை ஜனவரி 21-ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதிகள், அதுவரை தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுப்படி ஆலையை திறக்க தடை விதித்துள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close