பிளாஸ்டிக்கிற்கு தடை கோரிய மனு தள்ளுபடி!

  Newstm Desk   | Last Modified : 27 Dec, 2018 01:29 pm
hc-rejects-case-against-plastic-banned-in-tn

தமிழகத்தில் ஜனவரி 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் இதனை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கை இன்று சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

வரும் 2019 ஜனவரி 1ம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் இதற்கான உத்தரவை  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறப்பித்தார். இது சமூக மற்றும் சுற்றுசூழல் ஆர்வலர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இதனை எதிர்த்து ஏற்கனவே உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு புதுவை பிளாஸ்டிக் வியாபாரிகள் சங்கம் இன்று அவசர அவசரமாக வழக்கை தாக்கல் செய்தது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் பி.டி.ஆஷா ஆகியோர் அமர்வு முன்னிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

இதில், பால், எண்ணெய் மற்றும் அரிசி கவர்கள் உள்ளிட்ட சில பொருட்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உற்பத்தியாகி தமிழகம் வரக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களையும் பயன்படுத்தவும் அரசு அனுமதி அளித்துள்ளது என அரசு தரப்பு வழக்கறிஞர் தன்னுடைய வாதத்தை எடுத்து வைத்தார்.

இதற்கு எதிராக மனுதாரர் தரப்பில், 'தமிழக அரசின் இந்த உத்தரவால், சிறு தொழில்கள் பாதிக்கப்படும். வேலைவாய்ப்புகள் பறிபோகும். பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை மூடும் நிலை உருவாகும்' என்று வாதிட்டார். 

விசாரணைக்கு பின்னர் நீதிபதிகள், ஒட்டுமொத்தமாக பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கவேண்டும். விதிவிலக்குகள் கூட அளிக்கக்கூடாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர். மேலும், ஜனவரி 1ம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வரும் எனவும் உறுதிபட கூறியுள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close