திருவாரூர் இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்படுகிறதா? - மனுவை ஏற்ற உச்ச நீதிமன்றம்

  Newstm Desk   | Last Modified : 04 Jan, 2019 10:50 am
thiruvarur-by-election-is-to-be-postponed

கஜா புயல் நிவாரணப்பணிகள் நடைபெறுவதால் திருவாரூர் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா அளித்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. 

தி.மு.கவின் முன்னாள்  தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி மறைவையடுத்து, காலியாக அறிவிக்கப்பட்ட திருவாரூர் தொகுதிக்கு வருகிற ஜனவரி 28ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தொடர்ந்து, இந்த தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று தொடங்கி வருகிற ஜனவரி 10ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. 

இந்நிலையில் திருவாரூர் தொகுதி தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்ற மனுவை நேற்று சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த  டி.ராஜா உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்தார். கஜா புயல் நிவாரணப்பணிகள் நடைபெற்று வருவதால்  திருவாரூர் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் எனவும், தற்போதைய சூழ்நிலையில் இடைத்தேர்தல் நடந்தால் முறைகேடுகள் நடக்க வாய்ப்பிருப்பதாகவும் அவர் அளித்த மனுவில் கூறியுள்ளார். 

இந்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளதாக இன்று அறிவித்துள்ளது. விரைவில் இவ்வழக்கு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

newstm.in

 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close