உயர்கல்வித்துறை செயலரை கைது செய்க: சென்னை உயர்நீதிமன்றம்!

  Newstm Desk   | Last Modified : 07 Jan, 2019 06:01 pm

higher-education-deparment-secretary-to-be-arrested-madras-hc

பாரதியார் பல்கலைக்கழகம் தொலைதூர மையங்களை வெளிமாநிலத்தில் துவங்கியதற்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில்  உயர்கல்வித் துறை செயலர் மங்கத் ராம் ஷர்மாவை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பாரதியார் பல்கலைக்கழகம் தொலைதூர மையங்களை வெளிமாநிலத்தில் தொடங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில், உயர்கல்வித் துறை செயலர் மங்கத் ராம் உள்ளிட்ட 8 பேர் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

ஆனால், உயர்கல்வித் துறை செயலர் மங்கத் ராம் ஷர்மாவை தவிர மற்ற 7 பேரும் ஆஜராகி விளக்கமளித்தனர். இதையடுத்து, மங்கத் ராம் ஆஜராகாததால் கோபமடைந்த நீதிபதி கிருபாகரன், அவரை கைது செய்து நாளை மறுதினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த  மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டு வழக்கை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தார். 

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.