நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் உயர்கல்வித் துறை செயலர்!

  Newstm Desk   | Last Modified : 08 Jan, 2019 03:57 pm
mangat-ram-sharma-asks-sorry-in-madras-hc

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர்கல்வித் துறை செயலர் மங்கத் ராம் ஷர்மாவை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, இன்று அவர் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். 

பாரதியார் பல்கலைக்கழகம் தொலைதூர மையங்களை வெளிமாநிலத்தில் தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இதில், உயர்கல்வித் துறை செயலர் மங்கத் ராம் ஷர்மா உள்ளிட்ட 8 பேர் ஆஜராக வேண்டும் என்று முன்னதாக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

தொடர்ந்து நேற்றைய விசாரணையில், உயர்கல்வித் துறை செயலர் மங்கத் ராம் ஷர்மாவை தவிர மற்ற 7 பேரும் ஆஜராகி விளக்கமளித்தனர். இதையடுத்து, மங்கத் ராம் ஆஜராகாததால் கோபமடைந்த நீதிபதி கிருபாகரன், அவரை கைது செய்து நாளை மறுதினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த  மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து இன்று உயர்கல்வித்துறை செயலர்  மங்கத் ராம் ஷர்மா நீதிபதி முன்னிலையில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். இதனால் அவரை கைது செய்யும் உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close