வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே ரூ.1,000 பொங்கல் பரிசுத் தொகை!

  Newstm Desk   | Last Modified : 09 Jan, 2019 01:28 pm
pongal-gift-amount-to-be-given-to-below-poverty-line-people-madrashc

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே ரூ.1000 பொங்கல் பரிசுத் தொகை வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டேனியல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று ஒரு வழக்கு தொடர்ந்தார். அவர் அளித்த மனுவில், "ஏற்கனவே தமிழக அரசுக்கு நிதிச்சுமை இருக்கிறது. மேலும், கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் வழங்கும் பணிகளும் இன்னும் முடிவடையவில்லை. இந்த சூழ்நிலையில் இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவது அரசுக்கு மேலும் நிதிச்சுமையை கொடுக்கும். எனவே பொங்கல் பரிசு வழங்குவதற்கு தடை விதிக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வழக்கு இன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் ராஜமாணிக்கம், சத்யநாராயணா அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், "அரசு அறிவித்துள்ள ரூ.1000 பொங்கல் பரிசுத் தொகை அனைவருக்கும் ஏன் வழங்கப்படுகிறது? இந்த பணம் மக்கள் வரிப்பணம் தான். கட்சிப்பணம் ஒன்றும் இல்லை. 

நீதிபதியாக  இருக்கும் எனக்கு எதற்கு ரூ.1,000? அதற்கு பதிலாக, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் பொங்கல் பரிசுத்தொகை வழங்கலாம். மீதியுள்ள பணத்தில் மக்களுக்கு நல்ல சாலை வசதி, மருத்துவ உதவி, கல்வி வசதி உள்ளிட்டவை ஏற்படுத்திக்கொடுக்கலாம்" என்று கூறி பொங்கல் பரிசுத் தொகை வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும், அரசின் கொள்கை முடிவுகளில் தவறு இருந்தால் அதில் நீதிமன்றம் தலையிடும் என்று தெரிவித்துள்ளனர். 

அதே நேரத்தில்,  பச்சரிசி, சர்க்கரை, கரும்புத்துண்டு உள்ளிட்டவை வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதில் தடையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே நேற்று முதல் பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மூலம், இன்று பிற்பகல் நீதிமன்ற ஆணை வந்த பிறகு, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close