11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யக்கோரி வழக்கு: நாளை மீண்டும் விசாரணை

  Newstm Desk   | Last Modified : 09 Jan, 2019 04:03 pm
11-mlas-disqualified-case

ஓ.பி.எஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு விசாரணையை நாளை ஒத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஓ.பி.எஸ் உட்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கோரி, திமுக கொறடா சக்கரபாணி தொடர்ந்த வழக்கு நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார், ஆளும் கட்சிக்குள் குழப்பை ஏற்படுத்தி நிலையான அரசை குலைப்பதற்காகவே எதிர்க்கட்சி கொறடா வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், சபாநாயகரிடம் புகார் மனு அளிக்காமல், வழக்கு தொடர்ந்திருப்பதாகவும் வாதிட்டார். மேலும், அரசுக்கு எதிராக வாக்களித்தவர்கள் மீண்டும் கட்சியில் இணைந்து விட்டதாகவும், ஆளுநரிடம் மனு அளித்த 18 எம்எல்ஏக்கள் மீண்டும் கட்சியில் இணையததால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்த அவர், செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்து விட்டதாகவும் குறிப்பிட்டார்.

இதையடுத்து, வாதங்களை கேட்டறிந்த உச்ச நீதிமன்றம் நாளை எதிர்தரப்பு வாதங்களை முன்வைக்கமாறு கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close