விஸ்வாசம் படத்திற்கு தடை நீக்கம்..! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்...!

  Newstm Desk   | Last Modified : 09 Jan, 2019 05:02 pm
viswasam-can-be-released-in-all-areas-madras-hc

கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் விஸ்வாசம் படம் வெளியிடுவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடித்துள்ள 'விஸ்வாசம்' திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், ஃபைனான்சியர் உமாபதி, விஸ்வாசம் படத்திற்கு தடை விதிக்கக்கோரி வழக்கு தொடர்ந்தார். படத் தயாரிப்பு நிறுவனம் தன்னிடம் வாங்கிய கடனை திருப்பி கொடுக்கவில்லை, எனவே படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். 

இந்த மனு மீதான விசாரணை இறுதியில், கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் விஸ்வாசம் படம் வெளியாவதற்கு நீதிமன்றம் தடை விதித்தது. அப்போது, கடனை திருப்பி அளிக்கிறோம், ஆனால் விஸ்வாசம் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை உடனடியாக நீக்க வேண்டும் என தயாரிப்பு நிறுவனம் கோரியதற்கு, அதனை மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்வோம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்த நிலையில், படத்தயாரிப்பு நிறுவனம் தரப்பில், பைனான்சியருக்கு கொடுக்க வேண்டிய  ரூ.78 லட்சம் கடன் பாக்கியில் ரூ.35 லட்சத்தை இன்றே வழங்குவதாகவும், மீதித்தொகையை அடுத்த 4 வாரங்களில் தருகிறோம் என உத்தரவாதம் அளித்தனர். 

இதையடுத்து, விஸ்வாசம் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால் விஸ்வாசம் திரைப்படம் நாளை திட்டமிட்டபடி அனைத்து பகுதிகளிலும் வெளியாகிறது. இதனால் 'தல' அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close