பிளாஸ்டிக் தடை: வியாபாரிகளை துன்புறுத்தக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவு

  Newstm Desk   | Last Modified : 10 Jan, 2019 11:26 am

plastic-ban-high-court-order

பிளாஸ்டிக் தடை விவகாரத்தில் வியாபாரிகளை துன்புறுத்தக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழக அரசின் பிளாஸ்டிக் தடை உத்தரவை ரத்து செய்யக்கோரி, பிளாஸ்டிக் நிறுவனங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தடை செய்யப்படாத பிளாஸ்டிக் பொருட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்வதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை முழுமையாக பின்பற்ற வேண்டும். தடை செய்யப்பட்ட 14 பொருட்களை தவிர மற்றப்பொருட்களை பறிமுதல் செய்யக்கூடாது. பிளாஸ்டிக் விவகாரத்தில் வியாபாரிகளை துன்புறுத்த கூடாது என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து வழக்கு  விசாரணையை வரும் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.