பொங்கல் பரிசுத்தொகை விவகாரத்தில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்!

  Newstm Desk   | Last Modified : 11 Jan, 2019 05:50 pm
pongal-gift-issue-tn-govt-files-caveat-petition-to-sc

பொங்கல் பரிசுத்தொகை விவகாரத்தில் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதால் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் சிறப்புத்தொகுப்புடன் ரூ. 1,000 பொங்கல் பரிசுத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதன்படி, கடந்த திங்கட்கிழமை முதல் ரேஷன் கடைகளில் இந்த சிறப்பு பரிசுத் தொகை மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே ரூ.1000 பொங்கல் பரிசுத் தொகை வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்நிலையில், இன்று நடைபெற்ற விசாரணையில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமில்லாமல் சர்க்கரை வாங்கும் அட்டைதாரர்களுக்கும் ரூ. 1000 வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக எவரேனும் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இருப்பதாக கருதிய தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. அதாவது யாரேனும் மேல்முறையீடு செய்யும் பட்சத்தில், தமிழக அரசின் முடிவைக் கேட்காமல் நீதிமன்றம் எதுவும் முடிவு எடுக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close