கோடநாடு கொள்ளை வீடியோ: சிபிஐ விசாரணை நடத்த உச்சநீதிமன்றத்தில் மனு..!

  Newstm Desk   | Last Modified : 14 Jan, 2019 11:12 am
kodanadu-robbery-video-case

கோடநாடு கொள்ளை விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

உச்ச நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சார்பில் கோடநாடு கொள்ளை வழக்கு தொடர்பான மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கோடநாடு கொள்ளை வழக்கு தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் தமிழக முதலமைச்சர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே இந்த வீடியோ தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும்,  தமிழக காவல்துறை விசாரித்தால் முறையாக விசாரணை நடைபெறாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவை தேமுதிக வழக்கறிஞர் ஜிஎஸ் மணி உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close