பொதுச் சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கு: பாலகிருஷ்ணாரெட்டி மேல்முறையீடு

  Newstm Desk   | Last Modified : 17 Jan, 2019 03:07 pm
case-of-damaging-public-property

பொதுச்சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில், சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நிறுத்தி வைக்கக்கோரி முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற போராட்டத்தின் போது பேருந்துகள் சேதப்படுத்தப்பட்ட வழக்கில் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனையும், ரூ.10,500 அபராதமும் விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். 

இதைத் தொடர்ந்து, சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாலகிருஷ்ணா ரெட்டி மேல்முறையீடு செய்தார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், தண்டனையை நிறுத்தி வைக்கவோ, தீர்ப்புக்கு தடை விதிக்கவோ, முகாந்திரம் இல்லை என கூறி இடைக்கால மனுக்களை தள்ளுபடி செய்தது. 

இந்நிலையில், தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பாலகிருஷ்ணா ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close