குக்கர் சின்னம்: நாளை பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு

  Newstm Desk   | Last Modified : 17 Jan, 2019 03:55 pm
cooker-logo-case

குக்கர் சின்னம் ஒதுக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், நாளை பதிலளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இடைத்தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, அமமுக கட்சி துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், டெல்லி உயர்நீதிமன்றத்தில் உள்ள இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வெளியாகும் வரை, இனி வரும் தேர்தலில் குக்கர் சின்னம் ஒதுக்க வேண்டும் என கடந்த 2ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனிடையே இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில், இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, குக்கர் சின்னம் ஒதுக்குவது தொடர்பாக தேர்தல் ஆணையம் நாளைக்குள் பதிலளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close