டி.கே.ராஜேந்திரனின் நியமனம் தொடர்பான கோரிக்கை தள்ளுபடி! - சென்னை உயர் நீதிமன்றம்

  Newstm Desk   | Last Modified : 21 Jan, 2019 03:58 pm
madras-high-court-rejected-the-demand-of-petitioner-about-dgp-appointment

டி.கே.ராஜேந்திரனின் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று நிராகரித்துள்ளது. 

மதுரையைச் சேர்ந்த கதிரேசன் என்பவர் சென்னை உயர்நீதின்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அவர் அளித்த மனுவில், 'குட்கா முறைகேடு தொடர்பாக ஆவணங்களை திட்டமிட்டு மறைத்து, டி.கே.ராஜேந்திரன் பதவி நீட்டிப்பு பெற்றுள்ளதாகவும், அவரது பணி நீட்டிப்பிற்கு இடைக்காலத்தடை விதிக்க வேண்டும். அவரது பணி நியமனம் சட்ட விரோதம் என்று அறிவிக்க வேண்டும்' என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கின் இன்றைய விசாரணையில், 'தமிழக அரசுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் வந்து சேரவில்லை, அதனால் தான் பதில் தரவில்லை என்று கூறப்பட்டது. மேலும், மனுதாரர் தரப்பு வாதத்தின் போது, டிஜிபி ராஜேந்திரன் பணி நீட்டிப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால், அவரது கோரிக்கையை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.

மேலும், இவ்வழக்கில் டிஜிபி ராஜேந்திரன் மற்றும் தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் வரும் 29ம் தேதிக்குள் பதில் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தனர். மேலும், அடுத்த விசாரணை நடைபெறும் 29ம் தேதியே இவ்வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதிகள் கூறினர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close