உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது? - நீதிமன்றம் கேள்வி

  Newstm Desk   | Last Modified : 25 Jan, 2019 11:43 am
madras-hc-asked-tn-govt-that-howmuch-employment-created-through-first-world-investors-meet

2015ம் ஆண்டு நடந்த முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது? என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. 

சிங்கப்பூர் நிறுவனம் ஒன்று தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பாக  விசாரணைக்கு வந்தது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துவது குறித்து விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் இருந்து கூறப்பட்டது. 

ஆனால், இந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், நீதிபதிகள் தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளனர். 2015ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது? 2015 மற்றும் 2019 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மொத்தம் எவ்வளவு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close