காம கொடூரர்களின் மனுக்கள் தள்ளுபடி

  Newstm Desk   | Last Modified : 29 Jan, 2019 02:35 pm
hc-rejects-the-plea-filed-by-rape-case-accuseds

அயனாவரத்தில், மாற்று திறனாளி சிறுமியை பலாத்காரம் செய்த, காம கொடூரர்கள், தங்கள் மீதான வழக்கு விசாரணையை, மகளிர் நீதிமன்றத்தில் இருந்து, வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 

சென்னை அயனாவரத்தில், அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும், மாற்றுத்திறனாளி சிறுமியை, அங்கு பணியாற்றும் வாட்ச் மேன் உட்பட, 17 பேர், பல சந்தர்ப்பங்களில், பலாத்காரம் செய்தனர். 

இது  தொடர்பாக, 17 பேர் கைது செய்யப்பட்டு, இந்த வழக்கு விசாரணை, மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், காம கொடூரர்களில், 14 பேர், இந்த வழக்கு விசாரணையை, வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் எனக் கோரி மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தவிர, இந்த வழக்கை, மூன்று மாதத்திக்குள் விசாரித்து முடிக்கும் படி, மகளிர் நீதிமன்றத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close