பணிந்தது ஜேக்டோ - ஜியோ: தமிழக அரசு ‛கெத்து’

  Newstm Desk   | Last Modified : 29 Jan, 2019 05:23 pm
tn-government-denied-to-talk-with-jacto-geo


தங்கள் காேரிக்கை குறித்து பேச்சு நடத்த முதல்வர் அழைத்தால், போராட்டத்தை உடனடியாக கைவிட தயாராக இருப்பதாக, ஜேக்டோ - ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது. எனினும், வழக்கு நிலுவையை காரணம் காட்டி, அந்த அமைப்புடன் பேச்சு நடத்த, மாநில அரசு மறுத்துவிட்டது. 

ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தின் கூட்டமைப்பான ஜேக்டோ - ஜியோ அமைப்பினர், கடந்த 8 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

பல முறை வலியுறுத்தியும் பணிக்கு திரும்பாதவர்களை, சஸ்பெண்ட் செய்தும், பலருக்கு நோட்டீஸ் அனுப்பியும், தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில், மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க, தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் பணியும் நடந்து வருகிறது. 

இதற்கிடையே, 90 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்டதாக, உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர, 3 லட்சம் பேர், தற்காலிக ஆசிரியர்களாக பணியாற்றி விருப்பம் தெரிவித்து, விண்ணப்பித்துள்ளதாகவும் அரசின் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. 

அப்போது, தமிழக முதல்வர் பேச்சு நடத்த அழைத்தால், தங்கள் போராட்டத்தை முடித்து கொள்வதாக, ஜேக்டோ - ஜியோ
 அமைப்பின் சார்பில் நீதிமன்றத்தில் பதில் அளிக்கப்பட்டது. 

ஆனால், இது குறித்த வழக்கு நிலுவையில் உள்ளதால், போராட்டக்காரர்களுடன் பேச்சு நடத்த முடியாது என்றும், அவர்களை பேச்சுக்கு அழைக்க முடியாது எனவும், தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close