‛புயல் நிவாரணம் ஒழுங்கா போய் சேந்துச்சான்னு பொதுமக்களுக்கு காட்டுங்கப்பா’

  Newstm Desk   | Last Modified : 29 Jan, 2019 05:47 pm
show-the-list-of-distributed-gaja-cyclone-relief-fund-to-the-general-public-high-court-bench

கஜா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு, எவ்வளவு நிவாரணம் வழங்கப்பட்டது என்ற பட்டியலை, பொதுமக்கள் பார்வைக்கு வைக்கும் படி, மாவட்ட ஆட்சியர்கள், மாநில பேரிடர் மேலாண்மை குழு ஆணையர் ஆகியோருக்கு, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் வீசிய கஜா புயலால், ஏராளமானோர், தங்கள் வீடு, உடமைகளை இழந்தனர். பல லட்சம் ஏக்கர் கணக்கிலான விவசாய பயிர்கள் பாழாயின. இதனால், விவசாயிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 

இந்த புயலால் பாதிக்கப்பட்டோருக்கு, மாநில அரசின் சார்பில், நிவாரண நிதி வழங்கப்பட்டது. இந்த நிதிக்காக, மத்திய அரசு ஒரு பெருந்தொகை ஒதுக்கியதோடு, பாெதுமக்கள், தனியார் அறக்கட்டளைகளின் சார்பிலும்,தமிழக அரசிடம் நிவாரண நிதி குவிந்தது. 

இந்நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், யாருக்கு எவ்வளவு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என்ற விரபங்களை, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், வி.ஏ.ஓ., அலுவலகங்கள், தாசில்தார் அலுவகம் போன்ற இடங்களில், பொதுமக்கள் பார்வைக்கு வைக்கும் படி, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

இந்த உத்தரவு, மாவட்ட ஆட்சியர்கள், மாநில பேரிடர் மேலாண்மை குழு ஆணையர் ஆகியோருக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விபர பட்டியலை, பிப்., 12ல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close