உரிமம் பெறாத பெண்கள் விடுதிகளுக்கு உயர்நீதிமன்றம் தடை

  Newstm Desk   | Last Modified : 31 Jan, 2019 02:25 pm
ban-for-unauthorised-ladis-hostels-in-tamilnadu-high-court-branch-order

தமிழகத்தில், மார்ச் 1 முதல் உரிமம் பெறாமல் பெண்கள் தங்கும் விடுதிகள் இயங்க, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தமிழகத்தில், தங்கள் சொந்த ஊரை விட்டு, வெளியூர்களில் பணியாற்றும் பெண்கள், தனியார் விடுதிகளில் தங்கி பணியாற்றி வருவது அதிகரித்துள்ளது. எனினும், சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு நகரங்களில், அரசிடம் உரிமம் பெறாத பல்வேறு பெண்கள் விடுதிகள் இயங்கி வருவதாக புகார் எழுந்துள்ளது. 

இது தொடர்பாக, மதுரையை சேர்ந்த கதிரேசன் என்பவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டதாவது:

அரசு அனுமதி பெறாமல், உரிமம் பெறாத பெண்கள் தங்கும் விடுதிகள், மார்ச் 1க்குள் மூடப்பட வேண்டும். இந்த வகையான விடுதிகள், மார்ச் 1 முதல் தொடர்ந்து இயங்க தடை விதிக்கப்படுகிறது. உரிமம் பெறாத விடுதிகள், பிப்., 28க்குள் விண்ணப்பித்து உரிமம் பெறலாம். 

அனுமதி பெறாத குழந்தைகள் காப்பகம் நடத்தவும் தடை விதிக்கப்படுகிறது’’ என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close