'நெகடிவ் மார்க் முறை கூடாது' - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

  Newstm Desk   | Last Modified : 02 Feb, 2019 03:05 pm
no-negative-marking-in-competitive-exams-says-madras-high-court

போட்டித்தேர்வுகளில் தவறான பதில்களுக்கு அளிக்கப்படும் நெகடிவ் மார்க் முறையை முழுமையாக அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐஐடி மாணவரான நெல்சன் பிரபாகர் கடந்த 2013ம் ஆண்டு எழுதிய தேர்வில் மொத்தம் 75 மதிப்பெண்கள் பெற்றார். தவறான மதிப்பெண்களுக்கு நெகட்டிவ் மார்க் அளிக்கும் முறையில் 25 மதிப்பெண்கள் கழிக்கப்பட்டது. இதனால் அவர் வெறும் 47 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றார். 

இதையடுத்து மாணவர் நெல்சன் மறு மதிப்பீடு செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், '50 மதிப்பெண்கள் எடுத்தால் தான் அடுத்த நிலை அட்வான்ஸ் தேர்வுக்கு செல்ல முடியும். நான் 47 மதிப்பெண்கள் தான் பெற்றுள்ளேன். தவறான விடைகள் என்று கூறி எனக்கு 25 மதிப்பெண்கள் கழிக்கப்பட்டுள்ளது. எனவே எனது விடைத்தாளை மறுமதிப்பீடு செய்ய வேண்டும்" என்று கூறியிருந்தார். 

தொடர்ந்து, மறுமதிப்பீடு செய்யப்பட்ட நிலையில் அந்த மாணவரை அட்வான்ஸ் தேர்வுக்கு அனுமதிக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார். 

இந்த வழக்கு நேற்று நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், "கல்வியில் முன்னேற்றம் கண்ட கனடா, ஜெர்மனி நாடுகளில் கூட, நெகடிவ் மார்க் முறை பின்பற்றப்படவில்லை" என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. 

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சிபிஎஸ்சி மற்றும் இதர போட்டித் தேர்வுகளில் நெகடிவ் மார்க் முறையை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். 

நீதிபதியின் உத்தரவை அரசும், கல்வி நிறுவனங்களும் நிறைவேற்றுமா?

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close