கும்கி யானையாக மாற்ற தடை விதிக்கக்கோரிய மனு: இன்று மதியம் விசாரணை

  Newstm Desk   | Last Modified : 04 Feb, 2019 11:42 am
chinna-thambi-elephant-case

சின்னதம்பி யானையை கும்கியாக மாற்ற தடை விதிக்கக்கோரிய அவசர மனு இன்று மதியம் விசாரணைக்கு வரும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

காட்டு யானை சின்னதம்பியை கும்கியாக மாற்ற தடை விதிக்க வேண்டும் எனவும், யானையை மீட்டும் காட்டுக்குள் கொண்டு விட வேண்டும் என்றும் அருண் பிரசன்னா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்தார். மேலும் மனுவை உடனே விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். 

இந்நிலையில், அருண் பிரசன்னாவின் அவசர மனு இன்று மதியமே விசாரிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உறுதிபட தெரிவித்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close