முல்லை பெரியாறு பகுதிகளில் கட்டுமான பணிக்கு தடை விதிக்கக்கோரி தமிழக அரசு மனு..!

  Newstm Desk   | Last Modified : 04 Feb, 2019 12:58 pm
tamil-nadu-government-petition-in-supreme-court

முல்லைப்பெரியாறு அணைக்கான நீர் பிடிப்பு பகுதிகளில் கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. 

முல்லைப்பெரியாறு அணை பகுதியில் கேரள அரசு வாகன நிறுத்தம் அமைப்பதற்கு தடை விதிக்ககோரி தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், முல்லைப்பெரியாறு அணைக்கான நீர்ப்பிடிப்பு பகுதிகளில் புதிதாக கட்டடங்கள் கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் ஏற்கனவே உள்ள கட்டடங்களை அகற்ற உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டுமான பணிகளால் அணைக்கான நீர்வரத்து பாதிக்கப்படுவதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close