மதுவால் ஒரு தலைமுறையே சீரழிந்துவிட்டது: நீதிபதி வேதனை

  Newstm Desk   | Last Modified : 06 Feb, 2019 01:12 pm
alcohol-has-degenerated-one-generation-judge

வருவாய்க்காக டாஸ்மாக்கை  நம்பாமல் மாற்று ஏற்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தியுள்ளது.  

தமிழகத்தில் மது விற்பனை நேரத்தை குறைக்க வலியுறுத்தியும், டாஸ்மாக் கடைகளை 2 மணி முதல் 8 மணி வரை திறக்க உத்தரவிடக் கோரியும் தொடரப்பட்ட வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.  வழக்கை விசாரித்த நீதிபதி, 24 மணி நேரமும் மதுபானங்கள் கிடைக்கும் போது டாஸ்மாக் நேரத்தை மாற்றி வைப்பதில் என்ன பயன் என கேள்வி எழுப்பினார்.

மதுவால் ஒரு தலைமுறையே சீரழிந்து விட்டதாக கவலை தெரிவித்த நீதிபதி, இனி வரும் தலைமுறையையாவது காக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், அனைத்து ஊர்களிலும் கிராம சபை கூட்டங்களை நடத்தி டாஸ்மாக் வேண்டாம் என தீர்மானம் நிறைவேற்றலாமே என மக்களுக்கு அறிவுறுத்தியதோடு, வருவாய்க்காக டாஸ்மார்க்கை  நம்பாமல் மாற்று ஏற்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும் என தமிழக அரசுக்கும் அறிவுறுத்தியது.

தொடர்ந்து நேரத்தை குறைப்பது குறித்து தமிழக அரச பதிலளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை பிப்.28ம் தேதிக்கு ஒத்திவைத்தது.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close