ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கக்கோரிய மனு தள்ளுபடி

  Newstm Desk   | Last Modified : 07 Feb, 2019 01:22 pm
a-petition-to-set-up-international-airport-in-hosur

ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்க உத்தரவிடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம் மனுதாரருக்கு ரூ. 10,000 அபராதம் விதித்துள்ளது. 

ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்க உத்தரவிடக் கோரி சிலம்பரசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சர்வதேச விமான நிலையம் அமைக்கக்கோரி அரசுக்கு உத்தரவிட முடியாது என தெரிவித்த நீதிமன்றம், மனுதாரர் சம்பந்தப்பட்ட துறையை தொடர்பு கொள்ளாமல் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்கியதற்காக ரூ. 10,000 அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், அபராதத் தொகையை சிறார் நீதி நிதியத்தில் செலுத்தும்படியும், செலுத்த தவறினால் நடவடிக்கை எடுக்கும்படியும் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

newstm.in

 

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close