11 எம்.எல்.ஏக்கள் வழக்கில் இந்த வாரமே விசாரணை: ஏ.கே.சிக்ரி

  Newstm Desk   | Last Modified : 11 Feb, 2019 12:34 pm
this-week-s-investigation-on-11-mlas-case

ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை பதவி நீக்கம் செய்யக்கோரிய வழக்கு இந்த வாரமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே.சிக்ரி அறிவித்துள்ளார். 

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சட்டமன்றத்தில் வாக்களித்தனர். இதையடுத்து, 11 சட்டமன்ற உறுப்பினர்களையும் கட்சித் தாவல் தடை சட்டப்படி பதவி நீக்கம் செய்ய வேண்டும் என திமுக சார்பிலும், டிடிவி தினகரன் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தது. 

இந்நிலையில், ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் முறையிடப்பட்டது. இதையடுத்து, மேல்முறையீட்டு வழக்கு இந்த வாரமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதி ஏ.கே.சிக்ரி தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close