தமிழர்களின் பண்பாட்டை அறிய முயல்வதில் மத்திய அரசு காலதாமதம் செய்வது ஏற்புடையதல்ல என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
துத்துக்குடி சிவகளையில் அகழாய்வு நடத்துவது தொடர்பாக தூத்துக்குடியை சேர்ந்த காமராஜ் என்பவர் தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆதிச்ச நல்லூரில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சி முடிவு என்ன ஆனது? இதுவரை ஏன் அறிக்கை தாக்கல் செய்யவில்லை? என அடுக்கடுக்காக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். கீழடி அகழ்வாராய்ச்சியிலும் அதிகாரிகள் மாற்றம் என புகார்கள் எழுந்துள்ளன.
தமிழர்களின் பண்பாட்டை அறிய முயல்வதில் மத்திய அரசு காலதாமதம் செய்வது ஏற்புடையதல்ல என தெரிவித்த நீதிபதிகள், இது குறித்து மத்திய, மாநில தொல்லியல் துறை அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும் என்றும் பதிலளிக்க தவறினால் அதிகாரிகள் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் எனவும் தெரிவித்தனர். மேலும் துத்துக்குடி சிவகளையில் அகழாய்வு நடத்துவது பற்றி தொல்லியல்துறை பதிலளிக்கவும் உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை பிப்ரவரி 19ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
newstm.in