சின்னதம்பியை பிடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

  Newstm Desk   | Last Modified : 13 Feb, 2019 05:44 pm

the-high-court-has-ordered-to-catch-a-chinnathambi

உடுமலை அருகே சுற்றித்திரியும் காட்டு யானை சின்ன தம்பியை பிடிக்க வனத்துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை உயர்நீதிமன்றத்தில் விலங்குகள் நல ஆர்வலர்கள் அருண் பிரசன்னா மற்றும் முரளிதரன் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் உடுமலைப் பகுதியில் சுற்றித்திரியும் காட்டு யானை சின்னதம்பியை பிடிக்க வனத்துறையினருக்கு அனுமதியளித்தனர். மேலும் முகாமில் வைத்து பராமரிப்பது குறித்து தலைமை வன பாதுகாவலர் முடிவெடுக்கலாம் எனவும் நிரந்தரமாக கட்டுக்கு அனுப்புவதா? அல்லது முகாமில் வைப்பதா? என்பது குறித்து பின்னர் உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் கூறி வழக்கை ஒத்திவைத்தது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close