அனைத்து உயர் அதிகாரிகளின் அறைகளிலும் சிசிடிவி கேமரா கட்டாயம்: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

  Newstm Desk   | Last Modified : 14 Feb, 2019 01:39 pm
madras-hc-announced-that-cctv-camera-must-be-there-in-all-higher-authorities-room-in-tn-within-2-weeks

லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜிக்கு எதிரான பெண் எஸ்.பியின் பாலியல் புகார் குறித்த வழக்கில் அனைத்து உயர் அதிகாரிகளின் அறைகளிலும், முக்கியமாக பெண் ஊழியர்கள் பணியாற்றும் அலுவலகங்களில் இரு வாரங்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று தலைமை செயலருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி முருகன் மீது பெண் எஸ்.பி புகார் அளித்தன் பேரில், சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சிபிசிஐடி  விசாரணைக்கு தடை விதிக்க கோரி குற்றம் சாட்டப்பட்ட ஐ.ஜி. முருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கின் இன்றைய விசாரணையில், தற்போது அமைக்கப்பட்டுள்ள சிபிசிஐடி கமிட்டி விசாரணையை தொடரலாம் என்று நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கூறினார். 

மேலும் பேசிய அவர், "தமிழகத்தில் உள்ள அனைத்து உயர் அதிகாரிகளின் அறைகளிலும் இரு வாரங்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும், முக்கியமாக பெண் ஊழியர்கள் பணியாற்றும் அலுவலகங்களில் சிசிடிவி கேமரா கட்டாயம் பொருத்த வேண்டும்" என்று தலைமை செயலருக்கு உத்தரவிட்டுள்ளார். 

தொடர்ந்து தனது அறையிலும் இரு வாரத்தில் சிசிடிவி கேமரா பொருத்துமாறு தலைமை பதிவாளருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close