ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் தடை

  Newstm Desk   | Last Modified : 18 Feb, 2019 10:48 am
sterlite-case-judgement

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் அளித்த உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த மே மாதம் நடைபெற்ற போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, தமிழக அரசு  ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியிடப்பட்டு ஆலை மூடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டெர்லைட் ஆலை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கில் ஆலையை ஒரு சில நிபந்தனைகளுடன் திறக்கலாம் என பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. 

பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இதனிடையே ஸ்டெர்லைட் நிர்வாகம், பசுமை தீர்ப்பாயம் உத்தரவை அமல்படுத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுக்கள் மீதான இரு தரப்பு வாதம் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில், வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை இன்று நிராகரித்துள்ள உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை விதித்துள்ளதுடன், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்தும் உத்தரவிட்டது. மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு வேதாந்தா நிறுவனத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close