மாஜி அமைச்சருக்கு சிறை உறுதி: உச்ச நீதிமன்றம் அதிரடி

  Newstm Desk   | Last Modified : 18 Feb, 2019 01:09 pm
ex-minister-balakrishna-reddy-denies-banning-punishment

முன்னாள் அமைச்சர், பாலகிருஷ்ணா ரெட்டிக்கு விதிக்கப்பட்ட, சிறை தண்டனைக்கு தடை விதிக்க, உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

அ.தி.மு.க., தலைமையிலான மாநில அமைச்சரவையில், கால்நடைத்துறை அமைச்சராக இருந்தவர் பாலகிருஷ்ணா ரெட்டி. இவர், 1998ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைெபற்ற போராட்டத்தின் போது, பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், பாலகிருஷ்ணா ரெட்டிக்கு, மூன்று ஆண்டுகள் சிறை, ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்திது. இதையடுத்து, அவரது அமைச்சர் பதவி பறிபோனதுடன், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ், அவரின் எம்.எல்.ஏ., பதவியும் பறிபோனது. 

எனினும், ரெட்டி, தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். 


இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது என மறுப்பு தெரிவித்தது. 
மேலும், பாலகிருஷ்ணா ரெட்டி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்தும், சரணடைய விதிக்கப்பட்ட கால அவகாசத்தை நீட்டித்தும் உத்தரவிட்டுள்ளது. பாலகிருஷ்ணா ரெட்டியின் மேல்முறையீட்டு மனு மீது 4 வாரத்தில் பதிலளிக்கும் படி தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close