விளை நிலங்களில் மின்னழுத்த கோபுரம் அமைக்கும் விவகாரம்: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!

  Newstm Desk   | Last Modified : 18 Feb, 2019 01:24 pm
resistance-to-setting-the-voltage-tower-case

விவசாய நிலங்களில் உயர்மின்னழுத்த கோபுரம் அமைக்க தடைவிதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் தற்போதைய நிலை தொடர வேண்டும் என உத்தரவிட்டுள்ள உயர்நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. 

திருப்பூரில் இருந்து சத்தீஸ்கர் வரை 800 கிலோவாட் மின்சாரம் எடுத்து செல்ல திட்டமிடப்பட்டு அதற்கான உயர் மின்னழுத்த கோபுரங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்றன. இதனிடையே, விவசாய நிலங்களின் வழியாக மின்கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்நிலையில், விளை நிலங்கள் வழியாக உயர் மின்னழுத்த கோபுரம் அமைப்பதற்கு தடை விதிக்கக்கோரி நாமக்கல் மாவட்ட விவசாயிகள் 7பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி ராஜா, உயர் மின்னழுத்த கோபுரங்கள் அமைக்கும் பணியில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் வழக்கு தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close