தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : சிபிஐ தொடர்ந்து விசாரிக்க உத்தரவு!

  Newstm Desk   | Last Modified : 18 Feb, 2019 01:16 pm
tuticorin-gun-fire-the-cbi-has-been-continue-the-investigations

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சிபிஐ தொடர்ந்து விசாரிக்கலாம்  என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.  

தூத்துக்குடியில் கடந்த ஆண்டு மே மாதம் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, துப்பாக்கி சூடு தொடர்பான வழக்கை சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரிக்கலாம் என்று உத்தரவிட்ட நீதிமன்றம், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, புகார்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம் என்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவுக்கு தடை விதித்தது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close