சத்துணவு திட்ட முட்டை கொள்முதல் அரசாணை ரத்து! - உயர் நீதிமன்றம் அதிரடி

  Newstm Desk   | Last Modified : 22 Feb, 2019 12:32 pm
noon-meal-scheme-madras-hc-cancelled-tn-go

சத்துணவு திட்டத்துக்கு முட்டை கொள்முதல் தொடர்பான அரசாணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. 

சத்துணவு திட்டத்தின் கீழ் நாளொன்றுக்கு 48 லட்சம் முட்டைகளை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை கோரி, தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி அரசாணை வெளியிட்டது.

இதனை எதிர்த்து தமிழத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முட்டை உற்பத்தியாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதில், "தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆணையில், தமிழகத்தை சேர்ந்த முட்டை உற்பத்தியாளர்கள் மட்டுமே கொள்முதல் ஒப்பந்தத்தில் பங்கேற்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் குறைந்த விலையில் முட்டை விநியோகம் செய்பவர்கள் ஒப்பந்தத்தில் பங்கேற்க முடியாத ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளது. அரசுக்கு இதனால் வருவாய் இழப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, முட்டை கொள்முதல் தொடர்பான அரசாணையை ரத்துசெய்ய வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதையடுத்து, இந்த வழக்கை முன்னதாகவே விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், முட்டை கொள்முதல் நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

தடைக்கு எதிராக தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நேற்று நீதிபதி ஆர்.மகாதேவன் விசாரித்தார். 

இரு தரப்பு வாதம் முடிவடைந்த நிலையில், தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கான முட்டை கொள்முதல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக நீதிபதி அறிவித்தார்.

மேலும், "முட்டை கொள்முதல் தொடர்பாக புதிய ஒப்பந்த அறிவிப்பு வெளியிட வேண்டும். அதுவரை சத்துணவு திட்டத்தில் முட்டை வழங்குவதில் பாதிப்பு ஏற்படாதவாறு ஏற்கனவே முட்டை கொள்முதல் செய்தவர்களிடம், அதே விலையில் அதே எண்ணிக்கையில் முட்டை கொள்முதல் செய்யலாம்" என்று தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close