பாஜக பிரமுகர் கல்யாணராமுக்கு ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம்!

  Newstm Desk   | Last Modified : 23 Feb, 2019 03:39 pm
high-court-grants-bail-to-kalyanaram

மத நம்பிக்கை குறித்து கருத்து தெரிவிக்கும் போது கருத்து சுதந்திரம் பாதிக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

பாஜக கட்சியின் பிரமுகரான கல்யாணராமன், முகமது நபிகள் பற்றி முகநூலில் அவதூறு கருத்துக்கள் பரப்பியதாக கூறி எழுந்த புகாரையடுத்த கடந்த 2ம் தேதி அவர், சென்னை விமானநிலையத்தில் சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், கல்யாணராமனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது.

மேலும் மத நம்பிக்கை குறித்து கருத்து தெரிவிக்கும் போது கருத்து சுந்திரம் பாதிக்கப்படுவதாகவும், நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாறை படித்து தன் புரிதலை பதிவிட்டுள்ளாரே தவிர அவதூறு கருத்துக்களை பரப்பியதாக தெரியவில்லை எனவும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close