11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கை விரைந்து விசாரிக்க முடியாது: நீதிபதிகள்

  Newstm Desk   | Last Modified : 25 Feb, 2019 11:43 am
11-mlas-case-can-not-suddenly-inquire

ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கை விரைந்து விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள், கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சட்டமன்றத்தில் வாக்களித்தனர். கொறாடா உத்தரவுக்கு எதிராக வாக்களித்த 1 பேரையும் தகுதி நீக்கம் செய்யக் கோரி சாபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், சில மாதங்களில் ஓ.பி.எஸ் -இ.பி.எஸ் அணிகள் இணைந்ததால் சபாநாயகர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

இதனால், சென்னைஉயர் நீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சபாநாயகர் உத்தரவில் தலையிட முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. இதையடுத்து, 11 சட்டமன்ற உறுப்பினர்களையும் கட்சித் தாவல் தடை சட்டப்படி பதவி நீக்கம் செய்ய வேண்டும் என திமுக சார்பிலும், டிடிவி தினகரன் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தது. 

இந்நிலையில், ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தினகரன் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், இந்த வழக்கை விரைந்து விசாரிக்க முடியாது என கூறிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், வழக்கை விரைந்து விசாரிக்க எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டும் முடியவில்லை என தெரிவித்து கோரிக்கையை நிராகரித்தனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close