இயக்குநர் ஜமீல், நடிகை ஹன்சிகா மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? நீதிமன்றம் கேள்வி

  Newstm Desk   | Last Modified : 02 Mar, 2019 05:44 pm
what-action-was-taken-on-director-jameel-actress-hansika

இயக்குனர் ஜமீல், நடிகை ஹன்சிகா ஆகியோர் மீதான புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க சென்னை மாநகர காவல் ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இயக்குனர் யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் நடிகை ஹன்சிகா மோத்வானி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் மஹா. இப்படத்தின் போஸ்டர்களில், காசி நகரின் பிண்ணனியில் காவி உடையணிந்த பெண் துறவியாக இருக்கும் ஹன்சிகா, கஞ்சா மற்றும் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றன.

இந்த போஸ்டர், இந்து மத உணர்வுகளையும், பெண் துறவிகளையும் கொச்சைப்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி, சென்னை மாநகர காவல் ஆணையரிடம் இந்து மக்கள் முன்னணியின் அமைப்பாளர் வி.ஜி.நாராயணன் புகார் அளித்திருந்தார். அதில் போஸ்டர் காட்சியை அமைத்த இயக்குனர் ஜமீல் மீதும், நடிகை ஹன்சிகா மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தார்.

ஆனால், ஒரு மாதத்திற்கு மேலாகியும் புகார் மீது  எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், நாரயணன் அளித்த புகாரின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து இரண்டு வாரத்தில் பதிலளிக்க சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close