தமிழக டிஜிபியை பணியிட மாற்றம் செய்யக்கோரி நீதிமன்றத்தில் மனு!

  Newstm Desk   | Last Modified : 11 Mar, 2019 05:41 pm
case-filed-against-dgp-rajendran

தமிழக டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனை பணி இடம் மாற்ற கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்துள்ளார். 

மதுரையை சேர்ந்த கதிரேசன் என்பவர் மதுரைக்கிளையில் இன்று தாக்கல் செய்துள்ள மனுவில், "டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் மத்திய,மாநில அரசின் பரிந்துரையின் கீழ் தான் பணி நீடிப்பில் உள்ளார்,எனவே தேர்தலின் போது மத்திய மாநில அரசுக்கு ஆதரவாக செயல்பட வாய்ப்புள்ளது. மேலும் அவர் மீது குட்கா வழக்கு மற்றும் பல புகார்கள் உள்ள நிலையில், பணம் பட்டுவாடவை தடுக்க நடவடிக்கை எடுக்கமாட்டார். எனவே அவரை பணியிட மாற்றம் செய்து அவருக்கு பதிலாக வேறு ஒருவரை தமிழக டிஜிபியாக நியமிக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது. 

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் கிருபாகரன்,எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு நாளை விசாரணைக்கு வரும் என்று தெரிவித்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close