மணல் குவாரிகளுக்கு அனுமதி கூடாது : மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு!

  Newstm Desk   | Last Modified : 12 Mar, 2019 12:44 pm
do-not-allow-sand-and-stone-quarry-to-be-set-up-near-places-of-excavation

தமிழகத்தில் அகழ்வாராய்ச்சி நடைபெற உள்ள இடங்களை சுற்றி உள்ள பகுதிகளில் மணல், கல் குவாரிகள் அமைக்க மாவட்ட ஆட்சியர்கள் அனுமதி வழங்க கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு நடத்த தொல்லியல் துறைக்கு உத்தரவிடக்கோரியும், தூத்துக்குடி சிவகளை, பரம்பு பகுதியில் அகழ்வாராய்ச்சி நடத்தக் கோரியும் தூத்துக்குடியைச் சேர்ந்த காமராஜ், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தனித்தனி மனு தாக்கல் செய்துள்ளார். இதேபோல், திண்டுக்கல் மாவட்டத்தில் பழநி உள்ளிட்ட பகுதிகளில் அகழ்வாராய்ச்சி நடத்த உத்தரவிட கோரி பல்வேறு மனுக்கள் தாக்கல்  செய்யப்பட்டிருந்தது. 

இந்த மனுக்கள், நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிவகளை பகுதியில் அடுத்த  ஆண்டு ஆராய்ச்சி மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  திண்டுக்கல் அருகே  பழமையான சின்னங்கள் இருந்தாலும் தற்போது அந்த பகுதிகள் முழுவதும்  குடியிருப்புகளும்,  விளை நிலங்களும் அதிகமாக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,  சேட்டிலைட் மூலம் பூமியின் அடிபரப்பில் தொல்லியல் எச்சங்கள் உள்ளதா என ஏன் கண்டறிய கூடாது என கேள்வி எழுப்பியதோடு, அம்முறையில் கண்டறிந்து பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

மேலும், தமிழகத்தில் தொல்லியல் சின்னங்களாக அறிவிக்கப்பட்டவை, அறிவிக்கப்பட உள்ளவை, அகழ்வாராய்ச்சி நடைபெற உள்ள இடங்கள் ஆகியவற்றை சுற்றி உள்ள பகுதிகளில் மணல், கல் குவாரிகள் அமைக்க மாவட்ட ஆட்சியர்கள் அனுமதி வழங்கக் கூடாது எனவும், தொல்லியல் துறை சார்பில் இதுகுறித்த தகவல் பலகை வைக்க வேண்டும் எனவும்  உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close