டிஜிபி ராஜேந்திரன் விவகாரத்தில் தேர்தல் ஆணையமே முடிவு எடுக்கலாம்: மதுரைக் கிளை

  Newstm Desk   | Last Modified : 12 Mar, 2019 01:43 pm
dgp-rajendran-case-hearing-at-madurai-court

மக்களவை தேர்தலை முன்வைத்து, டிஜிபி ராஜேந்திரனின் பணி நீட்டிப்புக்கு நீதிமன்றம் தடை விதிக்க முடியாது, வேண்டுமானால் இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கலாம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. 

மதுரையை சேர்ந்த கதிரேசன் என்பவர் மதுரைக்கிளையில் நேற்று தாக்கல் செய்த மனுவில், "டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் மத்திய,மாநில அரசின் பரிந்துரையின் கீழ் தான் பணி நீட்டிப்பில் உள்ளார். எனவே, தேர்தலின் போது மத்திய மாநில அரசுக்கு ஆதரவாக செயல்பட வாய்ப்புள்ளது. மேலும், அவர் மீது குட்கா வழக்கு மற்றும் பல புகார்கள் உள்ள நிலையில், பணம் பட்டுவாடவை தடுக்க நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கையில்லை. எனவே, தேர்தல் சமயம் என்பதால், அவரை பணியிட மாற்றம் செய்து அவருக்கு பதிலாக வேறு ஒருவரை தமிழக டிஜிபியாக நியமிக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது. 

இந்த மனு இன்று நீதிபதிகள் கிருபாகரன்,எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதத்தின் முடிவில், , டிஜிபி ராஜேந்திரனின் பணி நீட்டிப்புக்கு நீதிமன்றம் தடை விதிக்க முடியாது, வேண்டுமானால் இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கலாம் என நீதிபதிகள் பதில் அளித்து வழக்கை ஒத்திவைத்தனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close