பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்க காலதாமதம் ஏன்?: நீதிமன்றம் கேள்வி

  Newstm Desk   | Last Modified : 13 Mar, 2019 10:33 am
why-is-the-delay-in-granting-birth-and-death-certificates-high-court

பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை வழங்க ஏன் காலதாமதம் ஆகிறது என்பது குறித்து வருவாய்த் துறை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. 

தூத்துக்குடியை சேர்ந்த அழகர்சாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், " பிறப்பு, இறப்பு சான்று பதிவு செய்ய தவறியவர்கள், அந்தந்த மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து பிறப்பு, இறப்பு சான்று பெற்று கொள்ளும்  நடைமுறை எளிமையாக இருந்து வந்தது.

இந்நிலையில் தமிழக அரசு கடந்த 2016 டிசம்பரில் வெளியிட்ட அறிவிப்பாணையில் பிறப்பு, இறப்பு  சான்றுகளை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்து பெற்று கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து பிறப்பு, இறப்பு சான்றுக்காக பலர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் அவர்கள் முறையாக விசாரித்து பிறப்பு, இறப்பு சான்றுகளை வழங்குவதில்லை. இதனால், பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர்" என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நேற்று, நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பிறப்பு, இறப்பு சான்றிதழ் கோரி தமிழகத்திலுள்ள கோட்டாட்சியர் அலுவலகங்களில் எத்தனை விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன? எத்தனை சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன? எத்தனை விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன? என்பது குறித்து தமிழக வருவாய்த் துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

மேலும், பிறப்பு இறப்பு சான்றிதழ்களை விரைவாக கொடுப்பதற்கு ஏதேனும் செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதா? காலதாமதம் ஆவதற்கு என்ன காரணம்? என்பது குறித்தும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 3 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close